பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்: பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

9 September 2020, 3:34 pm
Quick Share

தருமபுரி: கோபிநாதம்பட்டி கூட்ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் போலீசார் பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தன செப்டம்பர் மாதத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்எஸ்ஐ குமார் இரண்டாம் நிலை காவலர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, தென்கரைகோட்டை, சின்னங்குப்பம், ராமியம்பட்டி,எருமியம்பட்டி போன்ற இடங்களில்கொரோனா நோய் தொற்று வராமல் தடுக்கவும் நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு ₹200 சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மற்றும் முககவசம், சனிடைசர் உபயோகிக்காதவர்கள் அனுமதிக்கும் கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ₹5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பேனர்கள் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல்துறை சார்பாக வைக்கப்பட்டன.

Views: - 0

0

0