பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள்…. விரைவில் வீடு கட்டித் தரப்படுமென உறுதியளிப்பு…

7 August 2020, 10:49 pm
Quick Share

நீலகிரி: கூடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகிளில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்து, வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு விரைவில் வீடு கட்டித் தரப்படுமென உறுதியளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான புத்தூர்வயல், தேன்வயல் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள சுமார் 130 க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். பின்பு பொதுமக்களிடையே பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு விரைவில் வீடு கட்டித் தரப்படுமென உறுதியளித்தார்.

இதையடுத்து உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் இது வரை 444 செ.மீ மழை பதிவாகியுள்து.
8 ம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இதுவரை 950-க்கும் அதிகமானவர்கள் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் குழு, தீயணைப்புதுறை, காவல் துறை மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களுக்கு 4 லட்சம் நிவரணம் வழங்ப்பட்டுள்ளது. கன மழைக்கு 74 வீடுகள் சிறிய அளவிலும் வீடுகள் முற்றிலும் சோதமடைந்துள்ளது. 300-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதமாகியுள்ளது. மாவட்டத்தில் சேதமடைந்த தடுப்பு சுவர்கள் விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூர் பகுதியில் கனமழை காரணமாக ஏற்ப்பட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்ய கொடைக்கானலில் இருந்து 40 பேர் கொண்ட குழு வரவுள்ளது. இரண்டு தாட்களுக்குள் பணி நிறை வடைந்து மின் விநியோகம் சீர் செய்யப்படும் என்றார்.

Views: - 7

0

0