மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வாலிபர் – விளக்குத்தூண் காவல் துறையினர் விசாரணை

15 November 2020, 9:14 pm
Quick Share

மதுரை: மதுரை கீழவெளி விதியில் பிரபல தேவாலயம் முன்பு வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்குத்தூண் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை கீழவெளி வீதியில் இன்று மாலை கிறிஸ்தவ தேவாலயம் அருகே தலை வேறு உடல் வேறாக இளம் வாலிபர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சிவபிரசாத் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தைபார்த்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொலையாளிகள் விபரம்ஏதும் பதிவாகி உள்ளதா என்ற கோணத்திலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாலை வேளையில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Views: - 16

0

0