மதுபானகடையை மூட கோரி கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்

16 July 2021, 1:56 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே அரசு மதுபானகடையை மூட கோரி கொட்டும் மழையில் சாலையின் குறுக்கே கற்களை போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். கசத்தில் இயங்கி வரும் மதுபானக் கடை மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி இருப்பதால் ஏற்கனவே, இரண்டு முறை மதுபான கடையின் பின்புறம் உள்ள சுவரை துளையிட்டு மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுவிட்டனர். அதனால் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மதுபாட்டில்களை ஏற்றி வந்த மினி லாரியில் இருந்து மதுபாட்டில்களை கசம் பகுதியில் உள்ள புதிய கடைக்கு இறக்க டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் சாலையில் கற்களை வைத்து மறியல் செய்ய முற்பட்டனர். இந்த தகவலை அறிந்த திருவலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் முத்துவேல் தலைமையிலான காவலர்கள் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

Views: - 285

0

0