மக்கள் நீதி மையம் வேட்பாளர் முருகானந்தம் மனு தாக்கல்

Author: Udhayakumar Raman
18 March 2021, 6:52 pm
Quick Share

திருச்சி: திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் முருகானந்தம் மனு தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் இன்று கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள திருவெறும்பூர் தேர்தல் அலுவலர் அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது ,கல்லணை சாலையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

மக்கள் நீதி மையம் வேட்பாளர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் நின்று அங்கு திரண்டிருந்த மக்களிடம் இருகரம் கூப்பி வணங்கி டார்ச்லைட்டை உயர்த்தி காண்பித்தார். பின்னர் கல்லணை பிரிவு சாலையில் இருந்து திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் வரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்தார்.இதனால் ஊர்வலத்திற்கு பின்பு வந்த வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 39

0

0