வடக்குமலை பகுதியில் வற்றாமல் செல்லும் ஊற்றுநீர் : சுற்றுலா தளமாக்குமா…? தமிழக அரசுக்கு சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை

Author: kavin kumar
23 January 2022, 11:55 pm
Quick Share

கரூர் : கடவூர் அருகே வடக்குமலை பகுதியில் வற்றாமல் செல்லும் ஊற்றுநீர் பகுதியினை அரசு சுற்றுலாத்தளமாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் தாலுக்கா, கடவூர் வடக்குமலை பகுதியான எப்போதும் செழிப்பான பசுமை நிறைந்த பகுதி, இந்த மலையினை சுற்றி, ஏராளமான பனிமூட்டத்துடனும், மேக கூட்டங்கள் உரசி செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும், இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்போது துணை முதல்வராக இருக்கும் போது, இந்த பகுதியில் உள்ள தெற்குமலை பகுதியில் ஒட்டிய பொன்னணியாறு அணையினையும் அதனை சுற்றிய பூங்காங்களையும் சீரமைப்பு செய்து சுற்றுலாதளமாக மாற்றினார். ஆனால் அடுத்து வந்த ஆட்சியில் அந்த கடவூர் பகுதியினையே முற்றிலும் மறந்தாற்போல், பல்வேறு சீரமைக்கப்ப்ட்ட திட்டங்களை மறந்தனர்.

இந்நிலையில்., இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடவூர் பகுதியான கடவூர் என்கின்ற ஊரினை சுற்றி மலைப்பகுதிகள் மட்டும் தான் இருக்கும், அந்த புறம் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், இந்தப்புறம் திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மீதம் இருப்பது நமது கரூர் மாவட்டம், கடவூர் ஆகும், இந்நிலையில், கடவூர் வடக்குமலை பகுதியில் புகழ்பெற்ற முனியப்பன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. ஆன்மீக தலமான இந்த தலத்தில், இதனையொட்டியுள்ள மலையில், ஊற்றுநீர் போல எப்போதும் வந்து கொண்டிருக்கும் ஒரு சுனை அதிலிருந்து தண்ணீர் எப்போதும் வந்து கொண்டே இருக்குமாம், அப்புகழ்பெற்ற அந்த சுனையானதும், அந்த சுனையிலிருந்து வடியும் நீர் காட்சி அப்படியே பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும், அந்த நிலையில், அந்த நீரும் அவ்வளவு சுவையாக இருக்கும்,

இந்நிலையில், அந்த ஊர் மக்கள் மட்டுமில்லாது மற்ற மாவட்டங்களை சார்ந்தவர்களும் இந்த சுனைக்கு வந்து செல்வார், இன்று முழு ஊரடங்கு என்பதினால் யாரும் இல்லாத அந்த சுனை வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன, மேலும், இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடவூர் மலைப்பகுதியில் பல்வேறு வெளவால்களும், தேவாங்குகளும்., ஓணான்களும், காட்டு வகை விலங்குகளும் இருப்பதால் சுற்றுலாத்தளமாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சங்கமிக்கும் இந்த கடவூர் மலைப்பகுதியினை அரசு சுற்றுலாத்தளமாக்க முயற்சி எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 1343

0

0