தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட இருவர் கைது: பயிரிட்ட கஞ்சா செடிகள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
24 July 2021, 3:31 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட இருவரை போலீசார் கைது செய்து, அவர்கள் பயிரிட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பங்களாபட்டி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் பெரியகுளம் தென்கரை இந்திராபுரி தெருவை சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து பெரியகுளம் அருகே உள்ள முருகமலை பகுதியிலுள்ள மதன்குமாரின் தோட்டத்தில் பிளாஸ்டிக் பையில் கஞ்சா பயிரிட்டு வந்ததாக காவல்துறை வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியகுளம் வடகரை காவல்நிலைய ஆய்வளர் மீனாட்சி சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

அதில் 12 கஞ்சா செடி நாற்றுகளை பதியம் செய்து வளர்த்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையான நிலையில் இருவரின் பயண்பாட்டிக்றாக வளர்த்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து பெரியகுளம் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாள் நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் தொட்டத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த இளைஞர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Views: - 159

0

0