கேரளாவில் கொலை செய்து விட்டு தமிழகத்திற்கு தப்பிய 4 பேர்: குற்றவாளிகளை கைது செய்த தமிழக போலீசார்

2 July 2021, 7:57 pm
Quick Share

தேனி: கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே இருவரை கத்தியால் குத்திவிட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தப்பிய 4 பேரை தேனி மாவட்ட காவல் துறையினர் கைது செய்து கேரளா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல்துறையினர் சோதனை சாவடியில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எலம்பகரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் கிக்கி, அவரது மகன் ஓபட்டு ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு கேரளாவில் இருந்து தப்பி தமிழகம் வழியாக தப்பிச் செல்ல முயன்ற சலாபுதீன், நியாஸ் , யாவில், அகாஷ் ஆகியோ காரில் தேனி மாவட்டம் வழியாக தப்பிச் செல்வதாக தேவதானப்பட்டி சோதனைச்சாவடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேவதானப்பட்டி காவல்துறையினர் தப்பி வந்த குற்றவாளிகளை கைது செய்து தப்பிச் செல்ல பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கேரள காவல்துறையினர் பின்தொடர்ந்து வரவே கேரளா காவல்துறையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் சுலைமான் தலைமையில் ஆன காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ், சிப்பி யூஸ், சிரீஸ் மது ஆகியோரிடம் குற்றவாளி 4 பேரை ஒப்படைத்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை கேரளா காவல்துறையினர் கேரளா மாநிலம் அழைத்துச் சென்றனர். மேலும் இதே சம்பவத்தில் ஈடுபட்ட யோசாப், முத்தார் ஆகிய இருவரை ஏற்கனவே பெங்களூரில் கேரளா காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 138

0

0