கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு விவகாரம்: சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடம் போலீசார் விசாரணை…!!

Author: Aarthi Sivakumar
11 January 2022, 10:11 am
Quick Share

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவிய சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை பிடித்து செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும் காவி பொடி தூவியும் அவமரியாதை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெவ்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (26), மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் (28) ஆகிய இருவரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 296

0

0