ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது

1 November 2020, 5:08 pm
Quick Share

மதுரை: தமிழ்நாடு தினம் தடையை மீறி தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 1ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரை தமுக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, தமிழன்னை சிலை முன்பாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்,

மத்திய பணியிடங்களுக்கான நுழைவுதேர்வை தமிழில் நடத்த வேண்டும் , 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Views: - 16

0

0