சிறு மற்றும் கிராமப்புறக் கோவில்களில் திருவிழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

15 April 2021, 4:12 pm
Quick Share

மதுரை: சிறு மற்றும் கிராமப்புறக் கோவில்களில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் மேடை மெல்லிசைக் பாடகர்கள் சார்பாக சிறு மற்றும் கிராமப்புறக்கோவில்களில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்தனர். முன்னதாக மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு நாட்டுப்புர கலைஞர்கள் கரகம் சுமந்தாடியும், தப்பு அடித்தவாரு வந்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிராமப்புற கோவில்கள் மற்றும் சிறு கோவில்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் படி கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஊராடங்கை நீடிக்கும் பட்சத்தில் மாதம் தோறும் ரூ.10,000 இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Views: - 14

0

0