மாவட்ட இணைப்பதிவாளரை கண்டித்து கழுதையின் உருவ படத்திற்கு மனு

3 November 2020, 6:22 pm
Quick Share

விருதுநகர்: பணி ஒய்வு பெற்று 1 1/2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒய்வூதிய பணப்பலன் மற்றும் பென்சன் வழங்காத விருதுநகர் மாவட்ட இணைப்பதிவாளரை கண்டித்து கழுதையின் உருவ படத்திற்க்கு மனு அளிக்கும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் சார்பாக ஒய்வூதிய சங்க உறுப்பினர் குருபரன் ஒய்வு பெற்று 1 1/2 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு கிடைக்க கூடிய ஒய்வூதியம் பென்சன் வழங்கப்பட வில்லை எனக் கூறி இது குறித்து நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஒய்வூதிய இணைப்பதிவாளர் திலீப் குமார்யிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை கூறியும், இணைப்பதிவாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி கூட்டுறவு இணைப்பதிவாளாளர் அலுவலகம் முன்பு கழுதையின் உருவ படத்திற்கு மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட ஒய்வூதிய சங்கத்தினர் கலந்து கொண்டனார்.

Views: - 11

0

0