விழாக்களில் ஒளி.,ஒலி பந்தல் அமைக்க 50 சதவிகிதம் அனுமதி கோரி மனு

19 April 2021, 3:52 pm
Quick Share

வேலூர்: திருமண விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் கோவில் விழாக்களில் ஒளி.,ஒலி பந்தல் அமைக்க 50 சதவிகிதம் அனுமதியளிக்க கோரியும், ஒளி.ஒலி பந்தல் அமைப்பாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட கோரியும், ஒலி,ஒளி பந்தல் அமைப்பாளர்கள் ஊர்வலமாக சென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஊழியர்கள் கட்டிடத்தில் வேலூர் மாவட்ட ஒளி,ஒலி பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் நல சங்கத்தின் கூட்டம் கௌரவத்தலைவரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான ஒளி,ஒலி பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு திருமண விழாக்கள் சுப நிகழ்ச்சிகள் போன்றவைகளில் பங்கேற்க 50 சதவிகித அனுமதியளிக்க கோரி கையில் பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் திருமண விழாக்களில் சுப நிகழ்ச்சிகள் திருவிழாக்களில் ஒளி.ஒலி,பந்தல் அமைக்க 50 சதவிகிதம் அனுமயளித்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்

Views: - 17

0

0