10ஆண்டுகள் சிறையில் வாடும் அனைவரையும் விடுதலை செய்ய கோரி மனு

10 September 2020, 6:01 pm
Quick Share

திருச்சி: 10ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் மற்றும் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும், விடுதலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடத்தில் தமுமுக மற்றும் மனித நேயக மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் இன்று மாவட்ட தலைவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் மற்றும் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்பட வேண்டும்.

மிகப் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வசதி படைத்தவர்களை தமிழக அரசாங்கம் விடுதலை செய்கின்ற பொழுது ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றங்களை செய்துவிட்டு சிறையில் தங்கள் இளமை காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது அசரப் அலி மாவட்ட பொருளாளர் பாலக்கரை முகமது ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 0

0

0