விநாயகர் சிலை வைத்து வழிபாடு அனுமதிக்க கோரி முதலமைச்சரிடம் மனு…

19 August 2020, 3:34 pm
Quick Share

புதுச்சேரி: விநாயகர் சதுத்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்க கோரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் பொது இடங்கள், கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபடக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தது இருந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்கக்கோரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், இந்து முன்னணியின் தலைவர் சனில்குமார் ஆகியோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் வைக்க வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், கொரோனா தொற்று அதிக அளவில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்,

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த விடாமல் இந்து விரோத அரசாக புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என்றும், பாஜக சார்பில் புதுச்சேரியில் உள்ள அனைத்து கிளைகளிலும் வீட்டு வாசலில் விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்த அவர் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Views: - 6

0

0