சாலைகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

14 September 2020, 7:04 pm
Quick Share

மதுரை: மதுரையில் 1,028 கோடி மதிப்பிலான பறக்கும் மேம்பால பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் சாலை ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரை 1028கோடி மதிப்பீட்டில் பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 3ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பாலத்தின் தூண்கள் பிரமாண்டமான முறையில் அமைப்பதால் பாலம் அமைக்கும் பகுதிகளான மதுரை, ரேஸ்கோர்ஸ் சாலை முதல் ஊமச்சிகுளம் வரையிலான பகுதிகளில் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில், அந்த பகுதியில் உள்ள சாலைகள் முழுவதிலும் சேதமடைந்த நிலையில் வாகன ஓட்டிகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதாள சாக்கடை அமைப்புகளும் சேதமடைந்து சாலைகளில் சாக்கடை நீர் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரியும், சேதமடைந்த பாதாளசாக்கடை அமைப்புகளை சீ்ரமைக்க கோரியும் புதுநத்தம் சாலை ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஒப்பந்தபடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Views: - 8

0

0