திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

Author: Udhayakumar Raman
1 September 2021, 4:31 pm
Quick Share

தருமபுரி: அரூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் திருநங்கைகள் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்தமலை, சோரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு நிலையான வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். திருநங்கைகள் என்பதால் ஒரு சிலருக்கு வாடகை வீடும் கிடைப்பதில்லை இதனால், ஏற்கனவே வாடகை வீட்டில் உள்ள திருநங்கைகளின் குடியிருந்து வரும் வீட்டில் தங்கி வருவதாக தெரித்தனர். அரூர் பகுதியில் தங்களுக்கென தனியாக இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல முறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் அவர்களிடம் மனு அளித்தனர்.

Views: - 158

0

0