பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

10 July 2021, 2:54 pm
Quick Share

திண்டுக்கல்: பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மக்கள் நீதி மைய கட்சியினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்-பழனி சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக மதுரை மண்டல செயலாளர் சிவபாலகுரு தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், உட்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மதுரை மண்டல செயலாளர் சிவ பாலகுரு பேசியதாவது:- பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களையும் விலையும் உயர்ந்துள்ளது. மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பணமில்லாமல், வேலையில்லாமல் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், இந்த விலை உயர்வு தேவைதானா என்பதை மத்திய அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து மக்கள் நீதி மையம் போராட்டம் நடத்தும். மக்களுக்கு நன்மை செய்யத்தான் அரசு அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரி கொடுமைகள் தொடர்ந்தார் மக்கள் துயரங்கள் தொடரும், என்றார்.

Views: - 89

0

0