பெட்ரோல் டேங்க் வெடித்து வாலிபர் உயிரிழப்பு

6 October 2020, 8:16 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் பெட்ரோல் டேங்க் வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், வடக்கு பாகனூரை சேர்ந்தவர் ஆரோக்கியஇருதய சாமி. இவர் தனது தனது நண்பரைக் காண வண்ணாங் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருதயசாமி சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த பெட்ரோல் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. ஏற்கனவே விபத்தில் காயமடைந்த நிலையில் இருந்த இருதயசாமியால் ஓட முடியவில்லை. அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக தீயை அணைத்து காப்பாற்ற முயன்றனர்.

எனினும் இருதயசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு டேங்கர் லாரியின் டிரைவர் ராஜேந்திரன் குடிபோதையில் இருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து திருச்சி செஷன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குபதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 36

0

0