காவலர்களுக்கு உடல் பரிசோதனை முகாம்: ஆர்வத்துடன் கலந்து கொண்ட காவலர்கள்

17 July 2021, 1:56 pm
Quick Share

விருதுநகர்: இராஜபாளையம் கோட்டத்தில் உள்ள 400 காவலர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உட் கோட்டத்திற்க்கு உட்பட்ட காவல்துறை துணை கன்காண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் 9 காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், பெண் காவலர் உட்பட 400 பேருக்கு மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் இராஜபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் அனைவருக்கும் தனியார் இரத்த பரிசோதனை நிலையம் உதவியுடன் ரத்தப் பரிசோதனை நடைபெற்றது.

இதில் சர்க்கரை நோய், தைராய்டு, இரத்த அழுத்தம், கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உண்டான பரிசோதனைகள் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தில் தான் முதல் முறையாக காவலர்கள் அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் உடல் தகுதியை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதற்கு உதவியாக இருக்கும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த பரிசோதனை முகாம் நான்கு நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். காவலர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர்.

Views: - 84

0

0