உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
17 November 2020, 7:58 pmவிருதுநகர்: ராஜபாளையம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிக்கு 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை தவறாமல் வழங்க வேண்டும், ஆந்திரா கர்நாடகா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படுவது போல் அவ்வப்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிக்கு மூவாயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்,
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளிலும் மருத்துவமனைகளிலும் உரிய இடங்களை ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜீவா தலைமையில் மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு தினங்களாக ராஜபாளையம் பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருவதையடுத்து ஆர்ப்பாட்டத்தின்போது மழை பெய்தது மழையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.