ஊரடங்கு தளர்வு..கொல்கத்தாவிற்கு அண்ணாச்சி பழங்கள் ஏற்றுமதி தொடங்கியது.!குமரி விவசாயிகள் கடும் மகிழ்ச்சி

10 July 2021, 10:47 pm
Quick Share

கன்னியாகுமரி: கொரோனா ஊரடங்கு தளர்வு பின்னர் நேற்று முதல் குமரி மாவட்டத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு அண்ணாச்சி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது .இதனால் விவசாயிகள் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் குலசேகரம் ,வேளிமலை, சித்திரங்கோடு ,பேச்சிப்பாறை ,குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் அண்ணாச்சிப்பழம் பயிர் செய்யப்படுகிறது. இந்த அண்ணாச்சி கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இல்லாததால் அழுகிய நிலையில் காணப்பட்டது .இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் குமரி மாவட்டத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு அண்ணாச்சி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அண்ணாச்சி பழ சீசன் காலம் என்பதால் ஒரு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யக் கூடும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 189

0

0