இதுக்கு அரசு பேருந்தையே இயக்கலாம்! சமூக ஆர்வலர்கள் வேதனை.!!

17 August 2020, 2:10 pm
Nilgiri Travels - Updatenews360
Quick Share

நீலகிரி : டிராவல்ஸ் உரிமையாளர்கள் வாகனங்களில் அதிகம் நபர்களை அழைத்து செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தடை செய்துள்ளது . மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை தங்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு அரசு ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தி வருகிறது.

பொது போக்குவரத்தின் மூலம் மக்களுக்கு கொரோனா தொற்று பரவி விடும் என்ற அபாயத்தில் இந்த பொது போக்குவரத்து தடை செய்யபட்டு இருக்கிறது என்பது மக்கள் அனைவரும் அறிந்ததே .

இதனை சாதகமாக்கி கொண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள சில டிராவல்ஸ் உரிமையாளர்கள் கோத்தகிரி பகுதியில் இருந்து சோலூர் மட்டம், அரவேனு ,கோடநாடு போன்ற பகுதிகளுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் பெற்று கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

22 பேர் மட்டும் பயணம் செய்ய கூடிய வாகனத்தில் 35 முதல் 40 பேர் வரை பயணம் செய்கின்றனர். இதில் கொரோனா தொற்று உள்ள ஒரு நபர் அந்த வாகனத்தில் பயணித்தால் அதில் பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது .

மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவினால் நமக்கென்ன என்று அந்த டிராவல்ஸ் உரிமையாளர்கள் செயல்படுவது பல தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இது போன்று பொருப்பற்று செயல்படும் டிராவல்ஸ்களில் பயணம் செய்வதற்கு பதில் அரசு பேருந்தையே இயக்கிவிடலாம் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற டிராவல்ஸ் உரிமையாளர்களை கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 32

0

0