திருவெறும்பூர் சாலையை நீள்வட்டவாக மாற்ற திட்டம்: அமைச்சர் கே.என் நேரு பேட்டி

Author: Udhayakumar Raman
23 July 2021, 8:31 pm
Quick Share

திருச்சி: திருவெறும்பூர் சாலையை நீள்வட்டவாக மாற்ற திட்டம் உள்ளதாகவும், அதே நேரம் நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சிட்கோ வளாகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழநாடு ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தமிழநாடு நகர் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பேசுகையில், சிட்கோவில் பணி புரியும் பலர் தொழில் துவங்கும் போது பட்டா சிரமாமாக உள்ளது புகாரை முன் வைக்கின்றனர்.

தமிழக முதல்வரிடம் கலந்து பேசி அதற்கு தீர்வு காண்போம். 160 கோடி ரூபாய் பணத்தை ஒட்டுமொத்த சிறுகுறு நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும் தான்.டிசம்பர் வரை வரி செலுத்த வேண்டாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக கொரோனோவின் தாக்கம் காரணமாக பெரிய அளவில் நலிவடைந்துள்ளது. இதனை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து அமைச்சர் கே.என் நேரு பேசுகையில், திருவெறும்பூர் சாலையை நீள்வட்டவாக (elevated high way) மாற்ற திட்டம் உள்ளது. அதே நேரம் நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

திருவெறும்பூரில் எண்ணற்ற நிறுவனங்கள் முற்றிலும் நவிவடைந்துள்ளது. BHELல் முன்னர் 20ஆயிரம் கோடி முதலீடு செய்தார்கள், ஆர்டர்கள் இருந்தது, ஆனால் தற்போது 80%நிறுவனங்கள் வட நாடிற்கு சென்று விடுகிறது. இப்போது 2 ஆயிரம், 3 ஆயிரம் கோடி மட்டும் தான் முதலீடு. இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலாக இருந்த BHEL, இனி உணவு சம்பந்தப்பட்ட தொழில்களாக மாற்றினால் பலருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கோரிக்கையை முன் வைத்து உள்ளனர். திருச்சியில் விமான நிலையம் உள்ளது, பல்வேறு வசதிகள் உள்ளது என்பதால் உணவு உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களாக இதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம். என்றார்.

Views: - 154

0

0