மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி

17 April 2021, 3:39 pm
Quick Share

நீலகிரி: மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு உதகையிலுள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகர் விவேக் மறைவிற்கு திரைத்துறையினர் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உதகையிலுள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் அவரின் படத்திற்கு மலர் தூவி 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை காக்க நடிகர் விவேக் கலாம் கீரீன் அமைப்பு மூலம் இம்மாவட்டத்தில் பல பகுதிகளில் மரக்கன்றுகனை நட்ட வைத்துள்ளார் அதன்படி ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட முன்வர வேண்டுமென என ஆதரவற்றோர் இல்லத்தினர் தெரிவித்தனர்.

Views: - 36

0

0