ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவி கடத்தல்:வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

Author: Udhayakumar Raman
9 September 2021, 4:54 pm
Quick Share

சென்னை: ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு கே. எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நவீன் குமார் தான் வசித்து வரும் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீன் குமார் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும் தேடி வந்தனர்.இந்நிலையில் பட்டாளம் அருகில் பதுங்கி இருந்த நவீன் குமாரையும் மாணவியையும் போலீசார் பிடித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் விசாரித்து நவீன் குமார் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை கெல்லிஸில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

Views: - 127

0

0