புதுச்சேரிக்கு பிரதமர் நாளை வருகை: விழா மேடையை கட்டுப்பாட்டுக்குள் வந்த துணை ராணுவ

24 February 2021, 7:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரிக்கு பிரதமர் நாளை வருகையையொட்டி, அவர் பங்கு பெறும் பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது நிலையில் விழா மேடை துணை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை 25ஆம் தேதி புதுச்சேரிக்கு அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார். காலை 11:20 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர் கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் விமான நிலையம் அருகே பிரதமர் கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மேடை, தடுப்புகள் அமைப்பது, நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது இதனை டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இரண்டு கம்பெனி துணை ராணுவ படை புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டு மேடை மற்றும் விழா அரங்கு முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Views: - 0

0

0