ஒய்யாரமாக வலம் வந்த “புள்ளிகோக்கள்” : மடக்கிப்பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்த போலீசார்….

Author: Udhayakumar Raman
26 September 2021, 7:25 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஒய்யாரமாக வலம் வந்த புள்ளிங்கோங்களை போலீசார் மடக்கிப்பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் ஒய். எம். ஆர் பட்டி பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில்,

இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த “புள்ளிங்கோ களை” மடக்கிப்பிடித்து அவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனங்களின் ஆவணங்களை சோதனை செய்தனர். இதில் பெரும்பாலான “புள்ளிகோக்கள்” ஓட்டிவந்த இருசக்கர வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த “ஹேர்ஸ்டைலை’ மாற்றக்கோரி கண்டித்தனர். மேலும் காதில் கடுக்கன் அணிந்திருந்த நபர்களை கண்டித்து கடுக்கன்ளை(தோடுகளை) கழற்ற வைத்து அறிவுரை கூறினர். இந்த வாகன தணிக்கையில் 50க்கும் மேற்பட்ட புள்ளி ங்கோ க்கள் ஆங்காங்கே போலீசாரிடம் பிடிபட்ட குறிப்பிடத்தக்கது.

Views: - 113

0

0