பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி: 40 பேர் மீது போஸ்கோவில் வழக்கு பதிவு

Author: Udhayakumar Raman
23 October 2021, 4:27 pm
harassment -updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 40 பேர் மீது போஸ்கோவில் வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த வாரம் மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தபட்ட 10 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பெண்களில் ஒருவர் 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மற்றும் சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் என 40 பேர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உருளையான்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய நிறுவன கட்டிடங்களை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள். புதுச்சேரியில் ஒரே வழக்கில் 40 பேர் மீது போஸ்கோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 213

0

0