வீட்டிற்குள் நுழைந்து திருடி கொண்டிருந்த நபர்களை வெளிப்புறமாக பூட்டி சிறை பிடித்த நபருக்கு போலீஸ் பாராட்டு

19 August 2020, 10:29 pm
Quick Share

சென்னை: அரும்பாக்கம் அருகே வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வெளிப்புறமாக கதவை பூட்டி பிடிக்க உதவிய நபரை போலீசார் வெகுவாக பாராட்டினார்.

சென்னை அரும்பாக்கம் சக்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து மேல் தளத்தில் வசித்து வரும் சுதன் ராஜ்(21), என்பவர் சத்தம் போடாமல் கீழே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் 2 பேர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதைப் பார்த்தார். இருவரும் உள்ளே சென்றவுடன் அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் அரும்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவிண்டேனி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் வீட்டிற்குள் இருந்த கொள்ளையர்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளம் பகுதியை சேர்ந்த முரளி, கவுதம் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வெளிப்புறமாக கதவை பூட்டி பிடிக்க உதவிய நபரை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.

Views: - 23

0

0