துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது

24 August 2020, 2:27 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே 7 சென்ட் துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 2 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ கஞ்சா மற்றும் 35 கிலோ கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (65). இவர் விவசாயி ஆவார். பூபதி தனது 7 சென்ட் விவசாய நிலத்தில் துவரை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் பூபதி துவரை சாகுபடியுடன் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் உத்தரவின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில், பூபதி மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் தனது நிலத்தில் துவரை சாகுபடி உடன் பயிரிடப்பட்டிருந்த 40 கஞ்சா செடிகளை போலீசார் பிடிங்கி அங்கேயே தீ வைத்து அழித்தனர். துவரை சாகுபடியில் கஞ்சா சாகுபடி செய்து விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0