திருச்சியில் பொதுமக்கள் கூடும் 27 இடங்களில் காவல்துறை கட்டுப்பாடு: ரூபாய் 5 லட்சம் அபராதம்

Author: Udhayakumar Raman
3 August 2021, 6:26 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 911க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூபாய் ஐந்து லட்சம் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று மெதுவாக அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு 09ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறிபவர்களை தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக காவல் துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக சிந்தாமணி அண்ணாசிலை ரவுண்டானாவில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல்,

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 911க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூபாய் ஐந்து லட்சம் மட்டும் (ரூ.5,00,000/-) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 108

0

0