பஞ்சாயத்து தலைவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு: கிராம மக்கள் வட்டார வளர்சி அலுவலகம் முற்றுகை
11 September 2020, 6:36 pmதருமபுரி: தருமபுரி அருகே பஞ்சாயத்து தலைவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கிராம மக்கள் வட்டார வளர்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம் பஞ்சாயத்திற்கு நிதி வழங்காததால் தனக்கு வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முடியவில்லை எனவும், தனது பஞ்சாயத்து நிதி வழங்க வேண்டும் என அப்பஞ்சாயத்து தலைவர் தீபா அன்பழகன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். ஆனால் மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து தலைவரை சந்திக்காததால்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். தீக்குளிக்க முயன்றவரை காவல் துறையினர் மீட்டு அவர் மீது தீக்குளிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் தீபா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து அடிலம் பஞ்சாயத்து மக்கள் 100 க்கும் மேற்பட் டோர் காரிமங்கலம் வட்டார வளர்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
0