காணாமல் போன கைபேசிகளை கண்டுபிடித்து கொடுத்த போலீசார்: நன்றி கூறிய பொதுமக்கள்

Author: Udhayakumar Raman
23 October 2021, 5:56 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன கைபேசிகளை கண்டுபிடித்து கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் கடந்த ஆறு மாத காலமாக கைப்பேசிகளை மர்ம நபர்கள் திருடி வருவது அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜாஸ்ரீ உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையினர் செல்போன் திருடர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணை நடத்தியதில்,செல்போன் திருடர்களை பிடித்து விசாரணை செய்து 200 கைப்பேசிகளை அவர்களிடம் பறிமுதல் செய்தனர். கைபேசிகளை பறிகொடுத்து புகார் தராத நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் அவர்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்களிடம் கைபேசிகளை ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து விலை உயர்ந்த கைப்பேசி செல்போன் திருடர்கள் திருடிச் சென்று அதன் ஐம்இஐ எண்ணை மாற்றி கைபேசியை பயன்படுத்துவதாக தகவல் கிடைக்கவே, அதையும் சிறப்பு புலனாய்வு செய்து காவல் துறையினர் கண்டுபிடித்து இன்று கைபேசி உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜா ஸ்ரீ ஒப்படைத்தார். கைபேசி பெற்றுக்கொண்டனர். காணாமல் போன கைபேசிகளை கண்டுபிடித்துத் தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் நன்றி கூறினார்.

Views: - 163

0

0