கோழிக்கொண்டை முடி அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த புள்ளிங்கோ: காவலர் செய்த காரியம்..!!

7 March 2021, 7:06 pm
ksrn1
Quick Share

கிருஷ்ணகிரி: காட்டினாயனபள்ளி அருகே வித்தியாசமான கோழிக்கொண்டை முடி அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த சிறுவனுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை கூறிய சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே காட்டினாயனபள்ளி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் மஹராஜகடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வித்தியாசமான முடி அலங்காரத்துடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அந்த பகுதியில் வந்துகொண்டிருந்தான்.

அவனை காவல் ஆய்வாளர் அழைத்து விசாரிக்கையில் அவன் கர்த்தரை மேடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது உடனடியாக அவனை முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு சீராக முடி அலங்காரம் செய்ய சொன்னார்.

இந்நிகழ்வால் மிகவும் பயந்து போன அந்த சிறுவன் தேம்பி அழுதவாறு காதில் இருந்த கடுக்கானை கழற்றி விட்டுசீராக முடி திருத்தம் செய்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனான். இந்த நிகழ்வை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் வந்து பார்த்து அங்கிருக்கிற சிறுவர்களுக்கு அறிவுரை கூறினர்.

Views: - 207

0

0