காவல் ஆய்வாளர் கார் கண்ணாடி உடைப்பு:சி.சி.டி.வி காட்சி பதிவுகள் ஆய்வு

Author: Udhayakumar Raman
15 September 2021, 1:27 pm
Quick Share

சென்னை: சென்னையில் காவல் ஆய்வாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை சி.சி.டி.வி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகிறனர்.

சென்னை பெரம்பூர் முனியப்பன் தெருவில் வசித்து வருபவர் திருமலை. இவர் சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பிய ஆய்வாளர் தனது வீட்டின் அருகே அலுவலக காரை நிறுத்தி வைத்துள்ளார்.காலையில் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் யாரோ காரின் முன் பக்க கண்ணாடி மற்றும் டிரைவர் பக்கவாட்டுக் கண்ணாடி யை அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து ஆய்வாளர் திருமலை செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செம்பியம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 94

0

0