காவல்துறையினர் முழு ரோந்து பணி: முக கவசம் மற்றும் சமூக இடைவேளை பின்பற்றாத மக்களுக்கு எச்சரிக்கை

6 May 2021, 2:34 pm
Quick Share

நீலகிரி : உதகையில் உள்ள நகர்ப்பகுதி முழுவதும் நகராட்சி மற்றும் காவல்துறையினர் முழு ரோந்து பணியில் ஈடுப்பட்டு முக கவசம் மற்றும் சமூக இடைவேளை பின்பற்றாத மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் இன்று முதல் புதிய ஊரடங்கு தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பிற்பகல் 12 மணி வரை மட்டும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி கடைகள் வைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் உதகை நகரில் காய்கறி வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜ் ஆகியோர் தலைமையில் நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நாளை முதல் வணிகர்கள் 12 மணிக்கு முறையாக கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார். முதல் நாள் என்பதால் இன்று வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து சென்றனர்.

Views: - 45

0

0