இரு சக்கர வாகனத்தை திருடிய நபருக்கு போலீசார் வலை

11 April 2021, 6:53 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் சிறு பகுதியில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தூர் நகர் பகுதியிலுள்ள காமராஜபுரம் தெருவில் பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தகவல் இருந்து சாத்தூர் நகர் போலீசார் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும் காவல்துறையினர் பகல் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Views: - 35

0

0