வேலூரில் 1,32,581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பு

31 January 2021, 2:21 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 1,32,581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் முகாமை ஆட்சியர் சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம்,வேலூரில் அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுரேஷ், போலியோ தடுப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் தரணிவாசன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இம்மாவட்டத்தில் 132581 குழந்தைகளுக்கு காலை முதல் மாலை ஐந்து மணிவரை போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.

இந்த பணியில் 3555 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர் 110 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தபடுகின்றனர். மலைப்பகுதிகளிலும் முகாம் அமைக்க கூடுதலாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இம்முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது இருந்தாலும் அண்டை நாடுகளில் இருப்பதால் போலியோ முகாம் நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 132581குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் ரயில் நிலையம் பஸ் நிலையத்திலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி முன் களப்பணியாளர்கள் 1120 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக அரசு அறிவித்த பின்னர் மீண்டும் முன் களப்பணியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.

Views: - 18

0

0