புதுச்சேரியில் இன்று 370 நபர்களுக்கு கொரோனா தொற்று

18 August 2020, 5:07 pm
Cbe Corona 1 - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று 370 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8396 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மேலோங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பாதிப்புகள் கட்டுக்குள் வந்த பாடில்லை. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று 370 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8396 ஆக உயர்ந்துள்ளது.

இதில் புதுச்சேரியில் 317 நபர்களுக்கும், காரைக்காலில் 51 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,364 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 4909 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 9 நபர்கள் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8396 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.