புதுச்சேரியில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை..

1 August 2020, 6:52 pm
Mumbai-rain1-updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் உருவாகி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வளி மண்டல மேலடக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு பிறகு புதுச்சேரியின் நகரப்பகுதிகளான உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியின் புறநகர் பகுதிகளான அரியாங்குப்பம், தவளகுப்பம், பாகூர் வில்லியனூர், மதகடிப்பட்டு, காலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இடியுடன் கூட கன மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென பெய்த கனமழையினால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

Views: - 10

0

0