புதுச்சேரி மாநிலத்தை காப்பாற்ற சிறை செல்ல தயார்:முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம்

Author: Udayaraman
9 October 2020, 7:42 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தை காப்பாற்ற சிறை செல்லவும் தயார் உள்ளதாகவும், ஆவேசம் மேலும் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகைக்கு பதிலாக ரிசர்வு வங்கியிலோ அல்லது வெளிமார்க்கெட்டிலோ கடன் வாங்கிக்கொடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியிருந்தோம். ஆனால் மத்திய அரசோ மாநிலங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை புறந்தள்ளியுள்ளது. இது விதிமுறைகளுக்கு மீறியது என்றும், சட்டத்திற்குட்பட்ட புறம்பானது எனவும், மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் புதுச்சேரி மாநில அரசின் அதிகாரத்தை படிப்படியா பறிக்கும் வேலையை மத்திய பாஜக அரசு எடுத்து வருகின்றது. மக்கள் நலத்திட்ட விவகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு செய்கின்றது. அதனால் தான் புதுச்சேரியை தமிழகத்துடன் இணைத்து விடுவார்களோ என்றுதான் கூறினோன். நான்பேசியது தேச விரோத குற்றம் என்றும் என்னை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் சொல்கின்றார்கள். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எதிர்கட்சிகள் மீது தேசவிரோத வழக்குப்போடுவது மத்திய அரசுக்கு புதியது ஒன்றும் இல்லை இது வாடிக்கையானது.எதிர்கட்சிகளை சிபிஐ, அமலக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை வைத்து இப்படி எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள தலைவர்களை மிரட்டுகின்றார்கள்.

மாநில அரசின் அதிகாரத்தை தொடர்ந்து குறைத்து வருகின்றார்கள் அதனால் தான் மத்திய அரசு புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது என்று சொன்னோன். இது ஒன்றும் தேச விரோத குற்றம் அல்ல. புதுச்சேரி மாநில நலனுக்காக என்னை சிறையில் அடைத்தாலும் சரி நான் தயாராக இருக்கின்றேன். இரண்டு வேஷ்டி சட்டை எடுத்து தயாராக வைத்துள்ளேன் ஏற்கனவே சிறை சென்றவன் என்னை மிரட்டி பார்க்க வேண்டாம் என்றும் ஆவேசம் பேசினார்.

Views: - 40

0

0