புதுச்சேரியில் 4000ஐ எட்டும் கொரோனா…! பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

3 August 2020, 1:07 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 178 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000ஐ நெருங்கி உள்ளது.

உலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது.

பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தாக்கம் வேகமாக உள்ளது. தொடக்கத்தில் குறைவானது போன்று காணப்பட்டாலும் இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

இன்று ஒரே நாளில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,982 ஆக அதிகரித்துள்ளது.

2,411 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். 1,515 பேர் இன்னமும் மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமக 56 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.