லாரிகளை நிறுத்தி போலீசார் கட்டாய அபராதம்… லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்…

12 August 2020, 9:26 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் லாரிகளை நிறுத்தி போலீசார் கட்டாய அபராதம் விதிப்பதாக கூறி லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் மாநிலத்தின் வருவாய் மட்டுமின்றி தனிநபர் வருவாயும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் போக்கு வரத்து போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை என்ற பெயரில் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தவளக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த மனி லோடு வேனை நடுரோட்டில் நிறுத்தியுள்ளனர்.

இதனால் வேனை தொடர்ந்து வந்த மினி லாரி லோடு வேன் மீது மோதியுள்ளது. இதில் மினி லாரி முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. இதனிடையை இந்த விபத்து குறித்து தகவலறிந்த லாரி உரிமையாளர்கள் சோதனை என்ற பெயரில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி கட்டாய வசூல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டதாக கூறி விபத்தில் சிக்கிய லாரியுடன் தவளக்குப்பம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் போலீசாரின் இது போன்ற தவறான செயல்களால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும், ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் போலீசாரின் இந்த கட்டாய வசூலால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ஆகவே அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையெனில் மாநிலம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Views: - 7

0

0