விழுப்புரத்தில் 6 லட்சம் பேருக்கு மேல் பொங்கல் தொகுப்பு வழங்கல்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
Author: kavin kumar4 January 2022, 5:25 pm
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு மேல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் இன்று தமிழக அரசு வழங்கியுள்ள பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
அப்போது விழாவில் பேசிய அவர், பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாள் அனைத்து சமுதாயத்தினரும் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி குடும்ப டாலருக்கு மேல் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு மேல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், மாவட்ட பெருந்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
0