டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தபால் நிலையம் முற்றுகை

1 December 2020, 2:16 pm
Quick Share

தஞ்சை: டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது கோரியும், விவசாயிகளின் உற்பத்தியையும் வாழ்வாதாரத்தையும், கடுமையாக பாதிக்கும் என கோரி தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தஞ்சையில் தொடர் போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர் இருந்தபோதும் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர்.

Views: - 15

0

0