மன உளைச்சலில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

16 July 2021, 7:32 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநில தொழிலாளி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஷரான் பிளைவுட் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் உள்ளுர் பகுதிமக்கள் வடமாநில தொழிலாளர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஊரடங்கினை காரணம் காட்டி தொழிற்சாலையின் நிர்வாகம் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஊதிய குறைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

30 ஆண்டுகள் பணிசெய்தும் மாதம் ஊதியம் பத்தாயிரத்திற்கும் குறைவாக வழங்குவதால் பலர் குடும்பம் நடத்தவே கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ‌இன்று இத்தொழிற்சாலையில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த ஒடிசாவை சேர்ந்த சுஜித்பைரா என்பவர் தொழிற்சாலையின் அருகில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கும்மமிடிபூண்டி சிப்காட் காவல்துறையினர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 103

0

0