மன உளைச்சலில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

21 November 2020, 3:24 pm
Quick Share

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி எல்என்டி எம்எப்எப் தனியார் நிறுவனத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒப்பந்த கூலி தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி எல்என்டி எம்எப்எப் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாரதா பிரசாத் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரது குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பிற்கு உரிய நிவாரணத்தை ஒப்பந்த நிறுவனம் வழங்கக் கோரி சக ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் போலீசார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு பின்னர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்வது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 18

0

0