நடுரோட்டில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி:பலரது உயிரை காப்பாற்றிய பள்ளி சிறுவன்!!

Author: Udhayakumar Raman
28 November 2021, 2:33 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: அரசம்பட்டு கிராமத்தில் நடுரோட்டில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் பல பேர் உயிரை காப்பாற்றிய பள்ளி சிறுவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அரசம்பட்டு கிராமத்தில் சிறுவர்கள் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தனர். சங்கராபுரத்தில் இருந்த பாலப்பட்டு செல்லும் சாலையில் திடீரென சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அருந்து கொண்டு நடுரோட்டில் தொங்கியது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் அரவிந்த் என்ற சிறுவன் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததை கண்டு அதிர்ந்து சாலையின் இருபுறங்களிலும் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகளை மறித்து இங்கே வர வேண்டாம் மின்கம்பி அறுந்து கிடக்கிறது என வாகனங்களை மறித்து சத்தமிட்டான்.

இதனால் இருபுறங்களிலும் வந்த வாகன ஓட்டிகள்அதிர்ந்து போய் நின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மின்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மின்துறை ஊழியர்கள் 1 மணிநேரம் கழித்து வந்து சரி செய்தனர். இதனால் சங்கராபுரம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் எந்த உயிர்க்கும் சேதம் ஏற்படாமல் பலபேர் உயிர்களை காப்பாற்றிய அச்சிறுவனை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாராட்டியுள்ளனர். அச்சிறுவன் அரசம்பட்டு கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் பல முறை அரசம்பட்டு கிராமத்தில் நடந்த வண்ணம் உள்ளது இத்தகைய மெத்தபோக்கி பணிபுரியும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

Views: - 59

0

0