அரசு வழிகாட்டுதலின்படி நடைபெற்ற ஜெபக் கூட்டங்கள்

6 September 2020, 3:46 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு வழிகாட்டுதலின்படி இன்று முதல் ஜெபக் கூட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத தளங்களான கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலே பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு பொதுமுடக்கத்தில் மேலும் சில தளர்வுகளை அளித்த நிலையில் தேவாலயங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி பிராத்தனைகள் செய்ய அனுமதி அளித்திருந்தது.

இதனையடுத்து ஈரோடு மாவட்டம் பிரப் சாலையில் அமைந்துள்ளது. பிரபலமான தேவாலயங்களில் ஒன்றான சிஎஸ்ஐ பிரப் தேவாலயத்தில் சிறப்பு ஜெபகூட்டங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டது. இதனையடுத்து தேவாலயங்களுக்கு வருபவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பம் அளவிடப்பட்டு கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பின்னரே அனைவரும் சமூக இடைவெளியுடன் ஜெபக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.

Views: - 0

0

0